search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்"

    • சத்தீஸ்கரில் 20 இடங்களில் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது
    • மிசோரம் மாநிலத்தில் 40 இடங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது

    சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், 17-ந்தேதி 70 தொகுதிகளுக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    20 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. பிரசாரம் முடிவடைந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான வேலைகளை செய்து வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு சத்தீஸ்கரில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. அதேபோல் 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

    சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நடைபெறும் இடம் மாவோயிஸ்ட் நிறைந்த இடமாகும். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மீதமுள்ள 10 தொகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் 20 தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 25 பேர் பெண்கள். சுமார் 40,78,681 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 19,93,937 பேர் ஆண்கள், 20,84,675 பேர் பெண்கள் மற்றும் 69 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

    கடந்த 2018 சட்டசபை தேர்தலில் 68 இடங்களை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், 15 இடங்களை பாரதிய ஜனதா கட்சியும் பெற்றன. தற்போதைய தேர்தலில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.வும் மும்முரமாக போராடி வருகின்றன.

    • 'ஆதிவாசி'க்கு பதிலாக 'வனவாசி' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்.
    • வனவாசி மற்றும் ஆதிவாசி என இரண்டு வார்த்தைகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை ஒட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், ஜதல்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொது கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியிடம் சரமாரி கேள்விகளை கேட்டார்.

    "பா.ஜ.க. தலைவர்கள் தங்களது பேச்சுகளில் 'ஆதிவாசி'க்கு பதிலாக 'வனவாசி' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர். நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தான் வனவாசி என்ற வார்த்தையை உருவாக்கி உள்ளனர். வனவாசி மற்றும் ஆதிவாசி என இரண்டு வார்த்தைகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது."

    "மத்திய பிரதேச மாநிலத்தில், பா.ஜ.க. தலைவர் ஒருத்தர், பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்து, அதே சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து அதனை வைரலாக்கினார். இது தான் பா.ஜ.க.-வின் மனநிலை. அவர்கள் உங்களது பகுதியை விலங்குகள் வசிக்கும் காடாக நினைத்து, உங்களையும் விலங்குகளை போன்றே நடத்துகின்றனர்."

    "நாட்டில் தலித், ஆதிவாசி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் இருப்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். நாட்டில் ஒரே ஒரு சாதி தான் இருக்கிறது என்றால், அவர் ஏன் தன்னை ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்று கூறிக் கொள்கிறார்?," என்று ராகுல் காந்தி பேசினார்.

    முன்னதாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் உள்ள ஒரே சாதி ஏழ்மை தான் என்று தெரிவித்து இருந்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் போது தான் ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார்.

    • சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
    • சத்தீஸ்கா் மக்கள் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலைக் காண அழைத்துச் செல்லப்படுவா்.

    ராய்பூர்:

    90 உறுப்பினா்களைக்கொண்ட சத்தீஸ்கா் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு நவ. 7-ந் தேதியும், எஞ்சிய 70 தொகுதிகளுக்கு நவம்பா் 17-ந் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    சத்தீஸ்கரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 'சத்தீஸ்கா் 2023-க்கான மோடியின் உத்தரவாதம்' என்ற தலைப்பிலான பா.ஜ.க. தோ்தல் அறிக்கையை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டாா்.

    அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

    சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி, விவசாயிகளிடமிருந்து ஏக்கருக்கு 21 குவிண்டால் நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,100 வீதம் கொள்முதல் செய்யப்படும். இதற்கான பணம் ஒரே தவணையாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

    திருமணமான பெண்களுக்கான உதவித்திட்டத்தின் கீழ், அவா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 12,000 நிதியுதவி அளிக்கப்படும். நிலமில்லா ஏழை விவசாயத் தொழிலாளா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வழங்கப்படும்.

    ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த பெண்களுக்கு ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகிக்கப்படும்.

    கல்லூரி செல்லும் மாணவா்களுக்கு மாத பயணப்படி நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் அவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஒரு லட்சம் பணியிடங்கள் ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் நிரப்பப்படும்.

    பிரதமரின் வீட்டு வசதி (ஆவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் 2 ஆண்டுகளுக்குள் குழாய் மூலம் குடிநீா் விநியோகம் வழங்கப்படும்.

    அனைத்துக் குடிமக்களுக்கும் அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் 50 சதவீத பங்களிப்பு தொகையை மாநில அரசு ஏற்கும்.

    சத்தீஸ்கா் மக்கள் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலைக் காண அழைத்துச் செல்லப்படுவா். இவ்வாறு பா.ஜ.க. தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் 20 வாக்குறுதிகளை அமித் ஷா விவரித்தாா்.

    • சூதாட்ட செயலி விளம்பரதாரர்களிடம் இருந்து பணம் பெற்றதாக குற்றச்சாட்டு
    • இந்த விவகாரம் விசாரணைக்குரியதுதான் என அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது

    சத்தீஸ்கரில் வருகிற 7 மற்றும் 17-ந்தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முனைப்பு காட்டுகிறது. காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா வியூகம் வகுத்துள்ளது.

    இரு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சட்ட விரோத சூதாட்ட ஆபரேட்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட ஹவாலா பணத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதாக காங்கிரஸ் மீது ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.

    பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் கூறுகையில் "நம்முடைய தேர்தல் வரலாற்றில் இதுபோன்று ஒருபோதும் நடந்தது இல்லை. சத்தீஸ்கர் மாநில முதல்வர் புபேஷ் பாகேல் மக்களின் ஆதரவுடன் தேர்தலை எதிர்கொள்வில்லை. சூதாட்ட ஆபரேட்டர்கள் மற்றும் ஹவாலா பணத்தால் போட்டியிடுகிறார். அவர் ஆட்சியில் இருந்தபோது, பந்தய விளையாட்டில் விளையாடினார்" என்றார்.

    சூதாட்ட செயலியின் விளம்பரதாரர்கள், சத்தீஸ்கர் மாநில முதல்வருக்கு 508 கோடி ரூபாய் கொடுத்ததாக, ஒரு ஆய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி இது விசாரணைக்கு உரியது என்று அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

    இதற்கு பாகேல், தேர்தல் நடைபெறும் நிலையில் அமலாக்கத்துறை தன்னை குறிவைக்கிறது என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில்தான் ஸ்மிருதி இரானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • சத்தீஸ்கரில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • மொத்தமுள்ள 90 இடங்களுக்கு வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு இம்மாதம் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    கான்கெர் நகரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ராய்ப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகெல் பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் பேசுகையில், நேற்று பிரதமர் மோடி கான்கேருக்கு வந்தார். எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை என்றார்.

    சாமானியர்களின் வளர்ச்சியை அவர் பார்க்கவில்லை, அதானியின் வளர்ச்சியை மட்டுமே பார்க்கிறார்.

    சுரங்கத்தையும், நாகர்னார் உருக்காலையையும் அதானிக்கு கொடுக்கவில்லை. அதனால்தான் வளர்ச்சி இல்லை என்று சொல்கிறார்.

    அதானிக்கு சுரங்கங்களையும், நகர்நார் உருக்காலையையும் கொடுத்தால்தான் சத்தீஸ்கரில் வளர்ச்சி ஏற்படும் என்று பிரதமர் நினைக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    15 ஆண்டுகளுக்கு பிறகு சத்தீஷ்காரில் பாரதீய ஜனதா ஆட்சியை பறிகொடுத்தது. அங்கு காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. #Chhattisgarh #Congress #BJP
    ராய்ப்பூர்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து சத்தீஷ்கர் மாநிலம், 2000-ம் ஆண்டில் பிரித்து தனி மாநிலம் ஆக்கப்பட்டது. அதன் முதலாவது முதல்-மந்திரியாக அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த அஜித் ஜோகி பதவி வகித்தார்.

    2003-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தபோது, பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றியது. ராமன்சிங் முதல்-மந்திரி ஆனார்.

    அடுத்து 2008, 2013 ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலிலும் அந்த கட்சியே வெற்றி பெற்றது. ராமன்சிங் தொடர்ந்து 3 முறை முதல்-மந்திரி பதவி வகித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

    ஆனால் 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கடந்த மாதம் 12 மற்றும் 20 தேதிகளில் 2 கட்டமாக நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாரதீய ஜனதா கட்சி கடும் முயற்சியில் ஈடுபட்டது.

    ஆனால் காங்கிரஸ் கட்சியோ, ஆட்சியை இந்த முறை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கியது.

    இந்த ‘நீயா, நானா?’ மோதல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. பாரதீய ஜனதா தோல்வியை தழுவியது.

    அங்குள்ள 90 இடங்களில் காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் வென்று, மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

    ஆளுங்கட்சியாக இருந்து பாரதீய ஜனதா கட்சிக்கு 17 இடங்களே கிடைத்துள்ளன. மற்ற கட்சிகளுக்கு 10 இடங்கள் கிடைத்து இருக்கின்றன.

    முதல்-மந்திரி ராமன்சிங் ராஜ்நந்த்கான் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

    இந்நிலையில் சத்தீஷ்கர் பா.ஜனதா முதல்வர் ராமன் சிங் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  மேலும் ராமன் சிங் பேசுகையில், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பா.ஜனதா தோல்விக்கு முழுபொறுப்பேற்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மக்களுக்காக உழைத்ததை என் அதிர்ஷடமாக கருதுகிறேன். வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட்டு மாநில வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்றார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்து அஜித் ஜோகி தொடங்கிய ஜனதா காங்கிரஸ், இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

    சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி வேட்பாளர் யாரையும் அறிவிக்காமல் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
    சத்தீஸ்கரில் நக்சலைட் நிறைந்த பகுதிகளில் நாளை முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. #ChattsgarhAssemblyElections #FirstPhaseCampaign #BJP #Congress
    ராய்ப்பூர், நவ. 11-

    சத்தீஸ்கரில் நக்சலைட் நிறைந்த பகுதிகளில் நாளை முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. #ChattsgarhAssemblyElections #FirstPhaseCampaign #BJP #Congress

    சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 90 இடங்களை கொண்ட சத்தீஸ்கரில் நாளை (12-ந்தேதி) மற்றும் 20-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    மத்திய பிரதேசம், மிசோரமில் வருகிற 28-ந்தேதியும், ராஜஸ்தான், தெலுங்கானாவில் டிசம்பர் 7-ந்தேதியும் தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது.

    சத்தீஸ்கரில் நாளை, முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அங்கு ஆளும் கட்சியான பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. மேலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ், முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி தலைமையிலான ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    மொத்தம் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா ஆகியோர் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



    சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 3 இடங்களில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் டி.வி. கேமராமேன் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் ஓட்டுப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    துணை ராணுவத்தினர், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்குசாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    ×